ஜனவரி முதல் மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்று மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு 34 கோடி தற்போது ஒதுக்கப்பட்டு அந்தப் பணி வருகிற ஜூன் மாதம் துவங்கி ஆறு மாதத்தில் நடக்கும். ஓடுபாதை மேம்படுத்தும் பணி இரவு நேரத்தில் தான் செய்ய முடியும். எனவே இந்த ஆறு மாதத்தில் டிசம்பரில் ஓடுபாதை மேம்படுத்தும் பணி முடிந்துவிட்டால் […]
