அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]
