பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் […]
