அடுத்த 10 ஆண்டுகளில், 8600 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இந்த வர்த்தக செயற்கைக்கோள்களுக்கான சந்தையில் களமிறங்கவுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவியல், தொழிநுட்ப அரங்கைத் தாண்டி தற்போது வணிக அரங்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. உலக அளவில் பல பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சிகளில் வெற்றியடையப் போராடிவரும் நிலையில், […]
