அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாட்டில் உள்ள […]
