Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னோட பைக் எங்க….. வாலிபர் அடித்து கொலை…. கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது….!!

சென்னையில் தனது பைக்கை திருடிய நபரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 20 வயதான இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை – 4 பேர் அதிரடி கைது!

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர பேருந்தில் கண்ணாடி உடைத்து ரகளை … கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது ..!

மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!

நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“WHATSAPP குரூப்பில் ராஜபோதை” 1கி….ரூ3,000…. 3 கல்லூரி மாணவர்கள் கைது…!!

சென்னையில் வாட்சப் குரூப் மூலம் விலையுயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் செய்துள்ளனர். சென்னை வடபழனி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து வடபழனி காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் வடபழனி 100 அடி சாலையில் சந்தேகிக்கும் வகையில் மாணவன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு.!!

மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை” கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டதையடுத்து  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான  மோதல் ஏற்பட்டது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் : மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்….!!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டம் நடத்தினர்.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories

Tech |