பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C கணித துறையில் 2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார். […]
