கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம் உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]
