கல்லூரி வளாகத்திற்குள் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் கல்லூரி வளாகத்திற்குள் வந்து இறங்கி ஹெலிகாப்டரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டரில் பணம் எதுவும் இல்லை. […]
