வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குளிர்ந்தகாற்றுடன் திடீரென மழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்து சாலைகளிலும் […]
