தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ள நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டவருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்கவசம், கையுறைகளை அணிய […]
