கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]
