பொள்ளாச்சி விசாரணையில் மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]
