காட்டு யானைகள் கோவிலில் உள்ள சிலைகளை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் காட்டுயானைகள் டேன்டீ பணிமனை கதவு ஜன்னலை உடைத்து நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனைதொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த காட்டு […]
