அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி […]
