நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]
