மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த நெற்பயிருக்கு 30,000 ரூபாய் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் விவசாய […]
