இருசக்கர வாகனம் நிலைதடுமாறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரஷாந்த் தனது தாய் சித்ராவிடம் தனக்கு கே.டி.எம் இருசக்கர வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். […]
