மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். […]
