தடையை மீறி பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்திய இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி ஆறு அருகில் பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாயனூர் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது அங்கு சேவல் சண்டை நடத்தி கொண்டு இருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு […]
