சீனாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களில் 13 பேர் 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் யிபின் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் இருக்கும் சான்மசு என்ற நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வெள்ளநீர் புகுந்தது . இதன் காரணமாக 5 சுரங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், மேலும் 30 ஊழியர்கள் காணாமல் போனார்கள். ஊழியர்களை மீட்கும் பணியில் 251 […]
