தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]
