கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]
