Categories
சற்றுமுன்

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அதிரடி!

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா உயிரிழப்பு குறித்து காரணமறிய தமிழக அரசு குழு அமைப்பு – 23ம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 23ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பதற்கான சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையை விளக்கமாக ஆய்வு செய்து மாநில அளவிலான குழு முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் – முதல்வர் பழனிசாமி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – முதல்வர் தகவல்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – முதல்வர் பழனிசாமி பேட்டி!

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டிவருகிறார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார். சேலம் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது – முதல்வர் பழனிசாமி வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது – முதல்வர் நன்றி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏப் 20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் – முதல்வர் நம்பிக்கை!

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது, எனினும் தமிழக அரசின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

2,500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு 12 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 32 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. 12 ஐஏஎஸ் குழுக்களுக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை – முதலமைச்சர் பழனிசாமி தகவல்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என மாணவர்கள் குழம்பி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – முதல்வர் சொன்ன பதில்!

10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும்  அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின் தேர்வு  நடக்குமா? நடக்காதா? […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று 3ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது – முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்போது 2ம் நிலையில் இருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் கொரோனா […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… முதல்வர் பழனிசாமி பதில்!

“கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்வர் பழனிசாமி பேட்டி!

கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக பணிகள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 2,500 வென்டிலேட்டர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் உட்பட 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் 12 குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நமக்காக உழைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து ஐவிஆர்எஸ் குரல் வழி சேவை… முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு 2வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர் நேரத்தில் நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேரூதவியாக இருக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாணலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனோவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என கூறியுள்ளார். தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் 1,848 பேர் சிகிச்சை பெறுகின்றனர் தமிழகத்தில் 17 கொரோனா பரிசோதனை மையம் உள்ளது மேலும் 21 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்., 10 முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா சோதனை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்!

கொரோனா தொற்று அனைவரையும் தாக்கக்கூடியது என்பதால் மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்படுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKIGN : தமிழ்நாட்டில் நாளை முதல் காலை 6 – மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க முதல்வர் உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார். நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முகொரோனா தடுப்பு பணி,நிவாரண நிதி, கொரோனா வைரஸ் ழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

7ம் தேதி முதல் வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

7ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நடவடிக்கை – அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சரிடம் கேட்டு அறிகிறார். மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண உதவி ரூ. 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள்… ரேஷனில் வினியோகம் தொடங்கியது!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்தால் உரிய சிகிச்சை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவ்வப்போது நிலைமை குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 67 பேர் கொரோனாவால் பாதிப்பு… தடுப்பு பணிக்கு 11 குழுக்கள் அமைப்பு – முதல்வர் விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளதாக தகவல் அளித்துள்ளார். நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 9 குழுக்கள் அமைப்பு – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் காலை 6-9 […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கன்னியாகுமரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம்… மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி – முதல்வர் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள், சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி சேதமடைந்துள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம் கட்டப்படும். 41,333 அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 12.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மைலாப்பூரில் ரூ. 9 கோடியில் சமூக நலத்துறை கட்டடம் கட்டப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், மருத்துவமனைகளில் 92,406 படுக்கை வசதிகள் உள்ளன, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும், கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க நேற்று மாலை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31ம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும் – பேரவையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகள்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, ரூ. 9.66 கோடியில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும். 96 வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 305 பண்டக சாலை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தரப்படும். ரூ. 27 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டி தரப்படும். 95 கூட்டுறவு நிறுவனங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார் பங்கேற்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை பீலா ராகேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய […]

Categories
மாநில செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும். மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸால் தமிழகத்தில் சிறு, குறு விற்பனைகள் பாதிக்கப்படவில்லை – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸால் சிறு, குறு விற்பனைகள் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார். தமிழகத்தில் சிறு, குறு விற்பனைகள் நிலையங்கள் எதுவும் மூடவில்லை. தொழிலார்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள் […]

Categories
மாநில செய்திகள்

பேரவையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவை, சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதான சந்திப்புகளில் ரூ.500 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். தஞ்சாவூர் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர் […]

Categories
மாநில செய்திகள்

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் பாறையை இணைக்க பாதசாரிகள் பாலம் கட்டப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் தண்ணீர் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 930 கோடி செலவில் 4,865 ஏரிகளை தூர்வாரி உள்ளோம், விவசாயிகள் ஒத்துழைப்போடு மேலும் பல ஏரிகளை தூர்வார உள்ளோம் என தெரிவித்துளளார். மேலும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும் – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என பேரவையில் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில், 3 இடங்களில் சுங்க கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் […]

Categories

Tech |