தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ 2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது… அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. […]
