வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற பகுதியில் வேன் உரிமையாளரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வேனை அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமி அவ்விடத்தில் செடி மற்றும் கொடிகளை வெட்டி போட்டதன் காரணமாக பாபுவால் வேனை அங்கு நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக பாபு லட்சுமியிடம் கேட்டபோது […]
