பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]
