மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து […]
