Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபி_யை நோக்கி ”தடம் புரளும் காங். தலைவர்கள்” தேசிய அரசியலில் தீடீர் திருப்பம் …!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனுமதி தர முடியாது…. ”பாஜக தலைவருக்கு தடை” ….. மம்தா அரசு அதிரடி …!!

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உன் மனைவி, குழந்தையை பாலியல் தொழிலாளி ஆக்குவோம்…. போராடுவார்கள் மீது போலீஸ் காட்டம் …!!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு வெற்றி: இயல்பு நிலைக்குத் திரும்பிய அசாம்!

இணைய சேவைகளைத் தொடங்கும்படி மாநில அரசுக்கு குவஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. இதையடுத்து மசோதா சட்டமானதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் மட்டும் கலந்துகொண்ட போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. இதை முடக்கும் விதமாக இணைய சேவைகள் அசாமில் துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பாக பொதுநல வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒழுங்கா இருந்துக்கோங்க….. இல்லைனா அவ்வளவுதான்….. அமித்ஷாவுக்கு எச்சரிக்கை …!!

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கில் அமைதியை கேள்விக்குள்ளாக்கும் குடியுரிமை திருத்த மசோதா.!

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ.18) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமைத் திருத்த மசோதாவை கொண்டுவருவதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உறுதியாக உள்ளது. இதனை கொண்டுவருவதால் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இந்த திட்டத்துக்கு அந்த பிராந்தியத்தில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். வடகிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம்!

கவுஹாத்தியில் பல்வேறு மாணவ அமைப்புகள் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு(சிஏபி) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே குடிமக்கள் திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நினைக்கிறது. வடகிழக்கு பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த மசோதாவால் மீண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மேகலாயா, […]

Categories

Tech |