குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]
