Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் அதிமுக எதிர்க்கும்- திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு  ஆபத்து ஏற்படும் என்றால் அதனை உடனடியாக அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிலக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற பின்னரே அதிமுக ஆதரவு அளித்ததாகவும்  விளக்கமளித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகரை வைத்து டப்பிங் செய்கின்றனர் – திருமுருகன் காந்தி

பெரியார் தொடர்பாக ரஜினி பேசியது பற்றி எல்லாம் விவாதிப்பது வீண் வேலை என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திருமுருகன் காந்தி  நேரில் பேச இயலாதவர்கள் நடிகரை வைத்து டப்பிங் செய்வதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டம் என்பது மனுதர்மத்தின் மறுஉருவம் என தெரிவித்த அவர் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும் எனவும் கூறினார்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோடி, அமித்ஷா உருவ பொம்மைகள் எரித்து போராட்டம்…!! மாணவர்கள் மீது வழக்குப்பதிவு…!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை மசோதாவுக்கு அதிமுக ஆதரவு….!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக அவர் அறிவித்தார்.     மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று […]

Categories
தேசிய செய்திகள்

‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்’ – அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்!

இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார். ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் […]

Categories

Tech |