கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர் டென்னிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரியல் லைஃப் சூப்பர்மேனாக பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52. கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் […]
