நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சிலரின் உடல்கள் ஒரே இடமான கிறிஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவில் புதைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியுடன் மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் […]
