கிரிக்கெட் ஆடுவதற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்துவரும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘ தற்போதைய சூழலில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடாக உள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள், நிச்சயம் […]
