ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது. இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து […]
