ஆளுநர் தமிழிசையை நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து தாம் நடித்த “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு உச்ச நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அமிதாப் பச்சன், சுதீப், ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]
