இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]
