கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 600 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் […]
