இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற நகைச்சுவை காவியம் படைத்த இயக்குநர் சிம்புதேவன் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலத்தால் அழியாத நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை தனது முதல் படைப்பின் மூலம் கட்டியெழுப்பியவர் இயக்குநர் சிம்புதேவன். மதுரையைச் சேர்ந்த வெங்கட்ராமன்-திரவியம் வெங்கட்ராமன் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் செந்தில்குமார் என்ற சிம்புதேவன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற சிம்புதேவன், திரையுலகின் மீது கொண்ட அளப்பறிய காதலால் கோடம்பாக்கம் நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டார். இயக்குநர் சேரனிடம் […]
