திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள் விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]
