சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். […]
