சிறுமியை திருமணம்செய்த இளைஞர், திருமண நிகழ்வில் நண்பர்கள் எடுத்த டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் 17 வயதுடைய மகள் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய பழனிசாமி என்ற இளைஞருக்கும் கடந்த 3ஆம் தேதி (புதன்கிழமை) மணமகனுடைய வீட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியினரை, ‘மருமகளே! […]
