குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் ஹாஜியார் பகுதியில் தினகரன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யோகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் யோகலட்சுமி மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த யோகலட்சுமி தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து […]
