சலூன் கடையில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வையாபுரி நகரில் உள்ள சலூன் கடை ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் கச்சனால் என்ற பகுதியைச் சேர்ந்த நியாஸ் அலி (வயது 23) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து கரூர் நகர காவல் உதவி […]
