குறும்பு செய்ததால் பெண் குழந்தையை சுவரில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூசை மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சூசைமேரி வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தனது குழந்தைகள் கீர்த்தி மற்றும் ஆபெல் ஆகியோரை பீர்க்கன்காரணை காமராஜர் நகரில் வசித்து வரும் தனது சகோதரியான டார்த்தியிடம் அனுப்பி வைத்துள்ளார். […]
