குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாகநாதபுரம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்ற வாலிபருக்கும் 9-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து […]
