ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு […]
