அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சையானது என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சர்ச்சையாக பேசியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து […]
