ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் […]
