பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிப்பதாக தலைமை நீதிபதி திரு.சஞ்சய் பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு.சஞ்சய் பானர்ஜி பதவி ஏற்றுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏற்புரை ஆற்றிய திரு.சஞ்சய் பானர்ஜி வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கினார். திருவள்ளுவர் வாழ்ந்த மண்ணிற்கு வந்து இருப்பதில் பெருமை […]
